புரதச் சத்து (Protein)
மொத்த எரிபொருள் சக்தியில், நமக்கு 15% வரை, புரதச் சத்திலிருந்து கிடைக்க வேண்டும். இது உடலின் கட்டுமானப் பொருள் ஆகும். இவை எல்லா செல் களின் வளர்ச்சிக்கும், செல்களில் உள்ள மரபு அணுக்களுக்கும் (Genes - DNA, RNA) அமினோ அமிலங்களுக்கும் (Amino acids), தசைகளுக்கும், நோயை எதிர்க்கும் சக்திக்கும் (Immunity) செரிமான நொதிகளுக்கும் (Digestive Enzymes) தேவைப்படுகிறது.
இவை சைவ உணவான
பருப்பு வகைகள்,
பயிறு வகைகள்,
பட்டாணி,
பீன்ஸ்,
வேர்க்கடலை,
சோயா,
முந்திரி,
பாதாம்,
வால்நட் போன்ற பருப்பு வகைகளிலும், முளை கட்டிய பயிர்களிலும் உண்டு. மேலும் பாலிலும், பால் பொருட்களிலும் உண்டு.
No comments:
Post a Comment